- 50 வயதினை தாண்டியவர்கள்.
- குடும்பத்தில் மார்பக, சூலக அல்லது பெருங்குடல் புற்று நோய் உள்ளவர்கள்.
- மிக இள வயதில் பூப்படைதல், காலதாமதமான மாதவிடாய் நிறுத்தம்.
- பிள்ளை பேறற்ற பெண் அல்லது 30 வயதுக்கு மேல் கருத்தரித்தல்
- அதிகளவிலான கொழுப்பு , குறைவான நார் உணவுகள் உட்கொள்ளல்.
சூலகப் புற்றுநோய் அறிகுறிகள் முன்கூட்டி அறிவது கடினமாகும்.
பொதுவானவை:
- வயிற்று பகுதியில் கட்டி.
- வயிறு பெருத்தல்.
- வயிறு சுற்றளவு அதிகரித்தல்.
- எடை குறைதல்.
- அதிக தடவை சிறுநீர் கழித்தல் ,தன்னிச்சையாக சிறுநீர் வெளியேறுதல்.
- வயிற்று வலி.
- இடுப்பு வலி.
சில வேளைகளில் மருத்துவர் பரிசோதிக்கும் போது, கட்டி கண்டுபிடிக்கப்படலாம்; அல்லது வயிற்று பகுதி ஸ்கேன் செய்யும் போது கண்டு பிடிக்கப்படலாம். எல்லா கட்டிகளும் புற்று நோய் அல்ல.
அறுவை சிகிச்சையின் போது எடுக்கப்படும் சதைதுனுக்குகள் பரிசோதனையே சூலகப்புற்று நோயை ஊர்ஜிதப்படுத்தும்.
CA-125 எனும் இரத்த பரிசோதனை செய்யலாம்; இது வெவ்வேறு நோய்களில் அதிகரிப்பதால், இது ஒரு நல்ல சோதனை முறை அல்ல. எனினும் கணிக்க முடியும்.
அறுவை சிகிச்சையே பிரதான சிகிச்சை முறையாகும். இது சூலகங்கள், குழாய்கள் மற்றும் கருப்பையை அகற்றுவதன் மூலம் செய்யப்படும்.
புற்று நோய் மீண்டும் ஏற்படலாம் – இதனால் வாழ்க்கை முழுவதும் தொடர் கண்காணிப்பு தேவை.