AGNUS CASTUS. – அக்னஸ் காக்டஸ்
AGNUS CASTUS. – அக்னஸ் காக்டஸ்;
இவர்கள் நினநீர் சம்பந்தப்பட்ட தேகஅமைப்பு உடையவர்கள். சுய நினைவு இழந்துவிடுவார்கள். யோசிக்கும் சக்தி குறைவாக இருக்கும். இவர்களால் ஒரு நிகழ்ச்சியை கூட ஞாபகப்படுத்த முடியாது. ஒன்றை இரண்டு தடவை படித்த பின்பு தான் அறிந்து கொள்ளும் சக்தியுடையவர். LYC, PH-AC, SEP. நீண்ட நாட்களாக மூக்கு குழியில் இரணம் ஏற்பட்டிருக்கும். திருமணம் ஆகாத ஆண்களுக்கு சிறுநீர் புறவழியில் பால் போன்ற திரவம் கசிந்து, கசிந்து நரம்பு பலஹீனமாகிவிடும்.
வயதுக்கு முந்திய கிழத் தோற்றம் காணப்படும். வருத்தம், மனத் தாக்குதலினால் பித்து பிடித்தது போல் காணப்படுவார்கள். இளைஞர்கள் தகாத முறையில் பாலியியல் உணர்வை உபயோகித்தால் மானி தளர்ந்து தொங்கி விடும். முழுவதும் பலம் குறைந்து தளர்ந்து தொங்கும். இதனால் ஆண் உறுப்புகள் ஜில்லிட்டு போய்விடும். இதனால் செக்ஸ் விருப்பமும், பலமும் இருக்காது. முழுமையாக ஆண் தன்மையே இழந்து விடுவார்கள் CALAD, SEL.
ஆண் தன்மை இழந்த உடனே வெள்ளை மேக வெட்டை தோன்றும். இதற்க்கு தகாத மருந்தை கொடுத்து அடக்கப்பட்ட பிறகு இல்லற விருப்பமும், மானி விரைப்பும் கூட இருக்காது. இதனால் பெண்களுக்கு வெள்ளைபாடு கோடு போட்டது போல் கால் வரை வலிந்து கொண்டே மஞ்சள் நிற கோடு போல் ஏற்படும். இதனால் பெண்ணின் உணர்ச்சி உறுப்பு மிகவும் தளர்ந்து விடும். இதனால் பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியே நின்று போய்விடும். இதனால் பெண்களுக்கு கடுமையான வருத்தம் ஏற்படும்.
மூக்கில் கடல் மீன் கவிச்சையும், கஸ்தூரி வாசமும் கற்பனையாக வீசும். நடந்து கொண்டிருக்கும் போது மூக்கில் தோலுறியும்.
பாலுறுப்புகள்:- CALAD மற்றும் SELENIUM, AGNUS இதனுடன் தொடர்ந்து வேலை செய்யும் மருந்துகளாகும். ஆண், பெண் உறுப்பு தளர்ந்து, பலவீனமடைந்து அதை சார்ந்த இயக்கமே மலடு தட்டி போய்விடும்.
ஆண்:- மானி மிகவும் சிறுத்து போய் விடும். ஜில்லிட்டு போய்விடும். விரைப்பே இருக்காது. எழுச்சியும் இருக்காது. விருப்பமும் இருக்காது. அலி என்றால் இதே மாதிரி தான். ஆனால்
ஆண் மீது தான் விருப்பம் இருக்கும். (அலி) . விந்தே கசிந்தால் SELINIUM.. விந்து மாதிரி நீர் கசிந்தால் AGNUS CACTUS. உறுப்பை கையில் தேய்ச்சி, தேய்ச்சி விந்து கசிந்தால் ANAC, N-M, LYC,. இன்னும் சில மருந்துகள் உள்ளன.
பெண்:-உணர்ச்சி வெறுப்பு, கருப்பை கீழே இறங்கிய மாதிரி உணர்ச்சி SEP. கருப்பை கீழே இறங்கி போய் விட்டால் PODOPILLUM மலம்; கழிய முக்கும் போது கருப்பை பிதுங்கினால் உடன் கோபமும் இருந்தால் NUX. செக்ஸ் உணர்ச்சி மிக, மிக அதிகம், ஆனால் ஈடுபட முடியாது உடன் மயக்கம் வந்திடும் PLAT.துணி கூட அங்கு பட முடியாது. மீறி பட்டால் மிக, மிக உணர்ச்சியின் காரணமாக நாதம் கசிந்து விடும். உடன் கடுமையான மலச்சிக்கல் இருந்தால் ACID-MUR தேய்ச்சி, தேய்ச்சி நாதம் கசிந்து கொண்டே இருந்தால் ORICANUM.
பெண்:- யோனி சதை மெலிந்து கருப்பை சிறுத்தும், விருப்பமும் இருக்காது. மலடாகி இருப்பார்கள் .
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க - +91 9786901830, +91 9443054168
---