ACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்
ACID – MURIATICUM - ஆசிட் முரியாட்டிக்கம்; மூரியாடிக் ஆசிட்டின் கலவை.
மிக மிக அதிகமான மந்தம். களைப்பு, கை, கால் அப்படியே இருக்கும். தாடை தொங்கிக் கொண்டு வாயை கூட மூடாமல் அப்படியே கிடப்பான். கை, கால் கீழே இறங்குவதும், சறுக்குவதும் கூடத் தெரியாது. அவ்வளவு களைப்பு. எச்சில் கூட கூட்டி முழுங்க முடியாது. அவ்வளவு பலஹீனம். பலஹீனத்துக்கு பெரிய மருந்து இது தான். டைபாய்டு, மூளைக்காய்ச்சல் போன்ற பெரிய நோய்களிலும், கவலை, பயம், ஏமாற்றம் அடைந்த பின்பு இது போன்ற நோய்களுக்கு பிறகு ஏற்படும் மரண களைப்புக்கு இதுவே மருந்து. இந்த நிலையில் இருந்தால் இது பொருந்தும். மெட்டீரியா மெடிகாவிலேயே பெரிய மரண களைப்புக்கு இது தான் மருந்து. ஆகவே நாம் நோயாளியைப் பார்க்கும் போது மிக, மிக சோர்வாக பேசுகிறாரா? பார்க்கிறாரா? படுத்து இருக்கும் தோற்றம் அப்படியா இருக்கிறது என்று நாம் கவனித்தாலே மருந்து ஞாபகம் வந்து விடும். கண்ணில்
அதிகமான பிப்பும், உறுத்துவது போன்ற வலியும். திரும்பினால் துப்பாக்கில் சுட்டது போல வலியும் ஏற்படும்.
கண்:- வீங்கி சிவந்து இருக்கும். காதில் அழுத்தற மாதிரி, இழுக்கற மாதிரி வலியுடன் கொப்புளம் இருக்கும். காதில் ஏதோ சப்தம் கேட்கும்.
மூக்கு:- புண் ஏற்பட்டு அதில் தேள் கொட்டுவது போன்ற வலி ஏற்படும். மூக்கடைப்புடன் சளி ஒழுகும். கெட்டியான மஞ்சள் நிற சளி. மூக்கில் இரத்தம் வருதல். தும்பும் போது மூக்கில் கிச்சு, கிச்சு செய்வது போல இருக்கும்.
முகம்:- சிவந்து இருக்கும். கன்னம் சூடாகவும், எரிச்சலாகவும் இருக்கும். தாகம் இருக்காது. முகப்பரு அதிகமாக ஏற்படும். இவைகள் வெய்யில் காலத்தில் ஏற்படும்.
தலை:- உச்சியில் கொப்புளம் ஏற்படும். உதடு வீங்கி பெருத்து தோல் உறிந்து காணப்படும். அதில் தாங்க முடியாத அளவு வலி ஏற்பட்டு இரணம் மாதிரி இருக்கும். பற்கள் உறுத்துவது போல இருக்கும். ஈறு வீங்கி இரத்தம் வடியும்.
வாய்:- வறண்டு இருக்கும். நாக்கிலும் பக்கவாதம் வந்து எச்சில் ஒழுகும். நாக்கு தூக்க முடியாது. அதனால் பேச்சு வராது. நாக்கில் தோல் உறிந்து காணப்படும். நாக்கில் வெள்ளை வட்டம் காணப்படும். தொண்டை வறண்டு இரணமாகி இருக்கும். வெள்ளை வெள்ளையாக தோல் உறியும். நெஞ்செல்லாம் சளி அப்பியிருக்கும். சிறு நாக்கும், டான்சிலும் வீங்கி விடும். ஏரளமான
எச்சில் ஒழுகும்.
பசியில்:- நாக்கில் ஊசி போன மாதிரி சுவை தெரியும். மற்றும் அழுகி போன முட்டை போலவும், காரமாகவும் சுவை தெரியும். பித்த கசப்பும், இனிப்பும,; பீர் குடித்த மாதிரி தெரியும். அதிகமாக தாகம் இருக்கும். கறி சாப்பிட்ட பிறகு இப்படி எல்லாம் வந்து விட்டது என்பார். விக்கலும், வாந்தியும் வரும். வெறும் வயிற்றில் கூட பித்த வாந்தி வரும். சாப்பிட்ட பின்பும் பித்த வாந்தி வரும்.
சிறுநீரகம்:- சிறுநீர் பையின் பலஹீனத்தால் அடிக்கடி சிறுநீர் வரும். சீறுநீர் வரும் போது உயிர் போற மாதிரி வலி. தானாகவே சிறுநீர் சொட்டு சொட்டாக ஒழுகும்.
ஆண் உறுப்பு்:- மானித் திண்டில் உப்பி ரணம் ஆகி தோல் உறியும். விதை பகுதி கடுமையான பிப்பு ஏற்படும் அப்போது உணர்வுகளை அடக்கினாலோ, சொறிந்தாலோ சரியாகி விடும். ஆசை இருக்கும் ஆனால், ஈடுபட முடியாது. உறுப்பு தளர்ந்து இருக்கும்.
பெண் உறுப்பு:- பெண் உறுப்பை தேய்த்து, தேய்த்து கீழே இறங்கின மாதிரி இருக்கும். இவர்கள் இப்படி தேய்ப்பதிலேயே பைத்தியம் ஆகிவிடுவார்கள். மாத விலக்கின் போது இந்த இடம் புண்ணாகி விடும். சீழ் பிடித்தது போல் நிறைய தண்ணி ஒழுகும். அதனால் உறுப்பு பலஹீனம் ஆகி துணிக்கூட பட முடியாது மற்றும் உட்கார முடியாது.
நுரையீரல்:- மூச்சி இழுத்து, இழுத்து அந்த இடம் இரணம் ஆகி குதிரை இழுக்கும் மூச்சு மாதிரி சப்தம் கேட்கும். இரும்பி, இரும்பி சளியை சோப்பு நுரையாட்டம் கக்குவார்கள். மேலும் கீழும் மூச்சு வாங்கும். அப்பொழுது ஈட்டில் குத்துவது போலயிருக்கும். மூச்சு இழுப்பதை பார்த்தால் பயங்கரமாக இருக்கும். ஒரு பக்கத்து மார்பு இழுத்து கட்டியது போல இருக்கும். மூச்சு இழுக்கும் போது பயங்கரமான வலி ஏற்படும். நெஞ்சு எலும்புக்குள்ளே ஏதோ வைத்து அழுத்துகிற மாதிரி மந்தமான ஓர் உணர்வு இருக்கும்.
இதயம் மற்றும் துடிப்பு:- இதயத்தையும் நெஞ்சி எலும்பையும் வைத்து தைத்த மாதிரியிருக்கும். இது எப்போது என்றால் ஒரு பேச்சி பேசினாலும், ஆழ்ந்து மூச்சி இழுத்து விட்டாலும், சிறிது அசைந்தாலும், பயங்கரமாகயிருக்கும், அவருக்கு துடிப்பானது சப்தம் மொதுவாக கேட்க்;கும். ஆனால் அடிக்கடி துடிக்கும். குட்டை, குட்டையான சின்ன துடிப்பு, அப்போது இருதய பகுதி முழுவதையும் துப்பாக்கியில் வைத்து சுடுகிற மாதிரியிருக்கும். இரவு நேரத்தில் கரண்டு சேக் அடிக்கிற மாதிரி இருதயம் அடிக்கிறது என்பார். இப்படி இருதயத்தை பற்றிய பயங்கரத்தையே கூறுவார். இப்படி அவருடைய முகத்தை பார்க்கும் பொழுது வெளிப்படையாக தெரியும்.
முதுகு;- சுறுக்கு, சுறுக்குனு முதுகு வலிக்கும். வில்லாட்டம் உடம்பை இரண்டாக வளைப்பார்கள். இப்படி உடம்பை அப்படியே வருத்திக் கொண்டு இருப்பார்கள். துப்பாக்கியில் சுடுவது போல வலியிருக்கும் அப்போது தோள்பட்டையை கொண்டு குனிந்து, சிறுநீர் பையை அழுத்தி பிடிப்பார். அவ்வளவு கொடுமையாக இருக்கும்.
கை:- பலஹீனத்தால் பக்கவாதம் தோள்பட்டையை வைத்து முறுக்கிற மாதிரியும் வலி. விசேஷமாக கை விரல்கள் சம்பந்தப்பட்ட பகுதியில் கிழிக்கிற மாதிரி வலி என்பார். கைகளிலும், விரல்களிலும், உள்ளங்கையிலும் கிச்சு, கிச்சு செய்கிற மாதிரி உணர்வும், பிப்பும், ஈட்டியில் குத்துகிற மாதிரி இருக்கிறது என்பார். கைகளின் பின்பக்கமும். விரல்களின் பின் பக்கமும், சொரிந்த பின்பு செதில்களாக உதிரும். எழுத்து வேலை செய்த பிறகு பெரு விரல் சுளுக்கிவிட்டது என்பார். இப்படி சொரிந்த பிறகும், வேலை செய்த பிறகும், எரிச்சலோடு உள்ளங்கையும், விரல்களும் வீங்கியிருக்கும், அப்போது கையைப் பார்த்தால் சவத்தின் (இறந்தவர்களின்) கை போல இருக்கும்.
கால்கள் :- தொடைக்குள்ளே சுளுக்கு விழுந்து இழுக்கிற மாதிரியிருக்கும். தொடை இரண்டையும் இருக்கி பிடித்த மாதிரி இருக்கும். ஆனாலும் பலஹீனம் மாதிரியிருக்கும். தொடையில் வட்ட, வட்டமாக பிப்பு எடுக்கும். சொரிந்தால் சுகமாக இருக்கும். பிறகு வீங்கி விடும். கெண்டைக் காலும், குதிகால் நரம்பும் நடக்கும் போது இழுத்து பிடித்த மாதிரியிருக்கும். குதிங்கால் நரம்பு இரவிலும், பகலிலும், நடக்கும் போதும், தூங்கும் போதும், ஈட்டியில் குத்துகிற மாதிரி வலியும், சீழ் பிடித்த மாதிரி வலியும், கெண்டைக்கால்களில் குழிப்புண்களில் ஏற்படும் வலியும், அதில் எரிச்சலும் இருக்கும். பாதத்தை தொட்டுப் பார்த்தால் ஐஸ் மாதிரியிருக்குது என்பார்கள். கட்டை விரல் மட்டும் எரியுது என்பார்கள். அப்போது வீக்கத்தோடு அந்த பகுதி சிவந்து காணப்படும்.
குறிப்பு:- பொதுவாக இந்த மருந்து மனதாலும், உடலாலும், பல விதமான அடி தடிகளுக்கு பிறகும், உள்புறமோ, வெளி புறமோ, பல வித விஷ தாக்குதலுக்கு பிறகும், டைபாயிடு, மலேரியா, மூளைக்காய்ச்சல், போன்ற பல விதமான கடுமையான நோய்களுக்கு பிறகும், புற்று நோய், எய்ட்ஸ் போன்ற பலவித பயங்கரமான நோய்களுக்கும், மரண களைப்புக்கு பிறகும் ஏற்படும் களைப்புக்கும் ஒரே மருந்து இது தான்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க - +91 9786901830, +91 9443054168