ஆணுறுப்பின் முன் தோல் கீழிறங்கவில்லை
கேள்வி: உடலுறவில் ஈடுபடும்போது கூட என் ஆண் உறுப்பு முன் தோல் கீழிறங்கவில்லை அப்படியே இருக்கிறது. மேல் தோல் இருக்கமாக உள்ளது. நான் என் உறுப்பு மொட்டையும் (Glans of Penis) பார்த்ததில்லை,
இதற்கு என்ன தீர்வு?
பதில்:
உங்கள் பிரச்சனைக்கு ஆங்கிலத்தில் பைமோசிஸ் (Phimosis) என்று பெயர்.
- இந்த பிரச்னை உள்ளவர்களுக்கு, ஆண்குறியின் நுனியை தோல் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மூடிக்கொண்டு இருக்கும். தோலை உங்களால் பின்னோக்கி இழுத்து மொட்டை முழுமையாக பார்க்க முடியவில்லை என்றால் உங்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம்.
- ஒரு சாதாரணமான ஆண்குறி விரைப்படைந்தால், தோல் அதுவாகவே பின்னோக்கி நகர்ந்து மொட்டு வெளிப்படும். அல்லது, நீங்கள் தோலை பின்னால் இழுத்து விட்டால், மொட்டு வெளியே முழுமையாக தெரிந்து விடும்.
- ஒரு ஆண் குழந்தை பிறக்கும்போது, இயற்கையிலேயே தோல் ஆண்குறி மொட்டை மூடியபடி தான் இருக்கும்.அந்தப் பையன் இளம் பருவத்தை அடையும்போது, அவனுடைய தோல் பின்னோக்கி நகர்ந்து விடும். அதிக பட்சமாக பதினெட்டு வயதுக்குள் தோல் (Foreskin) தளர்ந்து, ஆண் குறியின் மொட்டு முழுமையாக வெளியே தெரியும்.
காரணங்கள்:
- பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனை (Congenital Phimosis).
- ஆண் குறி மொட்டு வீங்கி இருத்தல் (Balanitis).
- ஆண் குறித் தோலை கையால், வேகமாக இழுத்ததால் ஏற்படும் காயம்.
- வித்தியாசமான சுய இன்ப நிலை - உதாரணமாக, தலைக் குப்புறப் படுத்து, தலையணையில் ஆண் குறியைத் தேய்த்தல். அல்லது கடினமான பகுதியின் மேல் ஆணுறுப்பை தேய்த்தல்.
- நீரிழிவு நோயால் ஏற்படும் நோய் (இது நடுத்தர வயதினருக்கு வரும்)
- சுகாதாரமின்மை. (ஆண்குறியின் முன் தோலில் ஸ்மெக்மா எனப்படும் அழுக்கு சேர்ந்து நோய்த்தொற்று ஏற்படலாம்.
சிகிச்சை:
காரணம் கண்டறிந்து செய்யப்படும் முறையான மருத்துவ சிகிச்சை. மற்ற காரணங்களுக்காக மருந்துகளை உபயோகித்து சிகிச்சை அளிப்பது.
சிறப்பு மருத்துவரை அணுகினால் அவர் தகுந்த முறையில் சிகிச்சை அளித்து நல்வழிப்படுத்துவார்.
Dr Senthil Kumar D
Consulting Homeopath & Psychologist,
Relationship & Intimacy Coach,
Vivekananda Homeopathy Clinic & Psychological Counseling Center,
Velachery,
Chennai,
94430 54168