கேள்வி: டாக்டர் எனக்கு வயது 31, திருமணம் ஆகவில்லை. சில நாள்களாக விந்தில் ரத்தம் கலந்து வருகிறது. முக்கியமாக கைப்பழக்கம் செய்தபின்பும், உடலுறவு கொண்டபின்பும் ரத்தம் வருகிறது. இது எதனால் வருகிறது. எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. இதற்கு சிகிச்சை உண்டா?
டாக்டர் பதில்: விந்தில் இரத்தம் கலந்து வருவதை ஹெமடோஸ்பெர்மியா hematospermia அல்லது ஹீமோஸ்பெர்மியா hemospermia என அழைக்கப்படுகிறது. இவர்களின் விந்தானது இரத்தக்கறை படிந்த, இளஞ்சிவப்பு நிறத்தில் அல்லது பழுப்பு சிவப்பு நிறத்தில் இருக்கலாம். எந்த வயதிலும் இது ஏற்படலாம், எனினும் இது 30 முதல் 40 வயதுள்ள ஆண்களுக்கு மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட புரோஸ்டேட் பெரிதான ஆண்களுக்கு பொதுவாக வரும்.
காரணங்கள்
நோய்த்தொற்றுகள்- Infections,
- சிறுநீர் தொற்று Urinary Infection, பால்வினை நோய் Sexual Transmitted Disease (எஸ்டிஐ- STI) – பிறப்புறுப்பு ஹெர்பெஸ் Genital Herpes, மேக வெட்டை Gonorrhoea , கிளமீடியா Chlamydia மற்றும் ட்ரைக்கொமோனியாஸிஸ் Trichomoniasis .
அழற்சி நிலைமைகள் – Inflammations
- விந்து பை ,விந்தில் திரவத்தை உற்பத்தி செய்யும் சுரப்பியில் வீக்கம் Swelling in testis , விரைமேல் நாளம் வீக்கம் Varecocele, புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் Enlarged Prostate , சிறுநீர்ப்பை வீக்கம் Swelling in Urinary bladder - Cystitis,
நடத்தை – Activities
- அதிகப்படியான செக்ஸ் Over Sex அல்லது சுயஇன்பம் Over masturbation, உடலுறவில் பிரச்சனை Problem in Sex and Intercourse, அதிக நாட்கள் உடலுறவு கொள்ளாமலோ, விந்து வெளியேறாமலோ இருத்தல் Long absence of sexual activities , கரடுமுரடான உடலுறவு Rough Sex, கட்டுப்பாடற்ற உயர் இரத்த அழுத்தம் Uncontrollable Blood Pressure,
மேலும் பல காரணங்கள் உண்டு
சிகிச்சை,
மருத்துவரை நேரில் கலந்து ஆலோசித்து விந்தில் இரத்தம் வருவதற்கான சரியான காரணத்தை கண்டறிந்து தகுந்த சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா கிளினிக் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரமேஷ் - 28 – 99******00 – விந்தில் இரத்தம் வருதல், Blood in semen – 20-12-2017 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.