வழக்கம் போல அன்றும் கிளினிக்கில் நோயாளிகளை பார்த்தபடி பிஸியாக இருந்தேன். அப்போது ஒருவர் வந்து ரிசப்ஷனில் ஒருவருக்கு கடைசி அப்பாயிண்ட்மெண்ட் வேணும். அவர் வந்து காத்திருக்க முடியாது எனக்கூறி கடைசி அப்பாயிண்ட்மெண்டாக வாங்கி சென்றார். அப்படி அப்பாயின்மெண்ட் வாங்கியவர் அதை பலமுறை கன்பர்ம் செய்தபடி இருந்தார்.
அனைத்து நோயாளிகள் மற்றும் கவுன்சிலிங் கேஸ்களை முடித்துவிட்டு சற்று ரிலாக்சாக இருந்த நேரத்தில் ஒரு நபர் கன்சல்டிங் ரூம் உள்ளே வந்து மேடம் இப்ப வரலாமா என என்னிடம் நேரடியாக கேட்டார். அவர் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போது ஒரு ஆணின் பெயரையே கொடுத்திருந்தார். ஆனால் இப்போது மேடம் வரலாமா என கேட்கச்சொன்னார் எனக்கேட்டதும் எனக்கு சற்றே சந்தேகம் வர ஆரம்பித்தது. ஆனால் கவுன்சிலிங் கேஸில் நிறைய பேர் உண்மையான விபரங்களை தரமாட்டார்கள் என எனக்கு ஏற்கனவே நிறைய அனுபவம் இருந்ததால் அவரிடம் சரி மேடத்தை வர சொல்லுங்கள் என கூறினேன்.
அவர் சென்ற சில நிமிடங்களில் மிடுக்கு நடைபோட்டு மிக நேர்த்தியான உடையுடன் ஒரு நடுத்தர வயது பெண்மணி எனது முன்னே அமர்ந்து குட் ஈவ்னிங் டாக்டர் என்றார். நானும் பதில்வணக்கம் சொல்லிவிட்டு சொல்லுங்க மேடம் என்றேன்.
அவர் அழகான நடைமுறை ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவர் கூறியது தமிழில் பின்வருமாறு
நான் ஒரு நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறேன், எனக்கு கல்யானமாகி 12 வருஷம் ஆகுது, என் ஹஸ்பெண்டும் நல்ல பதவியில இருக்காங்க. எனக்கு 8 வயசுல ஒரு பெண் குழந்தை இருக்கு, அவளும் நல்ல ஸ்கூல்ல படிக்கறா. பணத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல, நல்ல வருமானம் வருது. கார் இருக்கு, பங்களா இருக்கு, சொத்துக நெறைய இருக்கு, கூப்பிட்ட குரலுக்கு வேலைகாரங்க இருக்காங்க. சமூகத்துல நல்ல மரியாத இருக்கு எங்களுக்கு என்றார்.
பொதுவாக கவுன்சிலிங்கில் அவர்கள் பேசும் போது நான் எப்போதும் குறுக்கே பேசுவதில்லை, எனவே அமைதியாக அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன்.
அவர் தொடர்ந்தார்,
டாக்டர் கொஞ்ச நாளா எனக்கு கோவம் அதிகம் வருது, என்னால கட்டுப்படுத்த முடியல, என் பதவிக்கு நான் கோவப்படக்கூடாது, அதனால ரொம்ப கஷ்டப்பட்டு அதை கட்டுபடுத்திக்கறேன். ஒரு கட்டத்துல என்னையும் அறியாம நான் எங்க வெளிக்காட்டிடுவனோனு பயமா இருக்கு என்றார். இதனால எனக்கு அடிக்கடி தலவலி வருது, படபடப்பு அதிகமா இருக்கு, வேர்த்து கொட்டுது, ஒரே பயமாவும் பதட்டமாவும் இருக்கு, அந்த எடத்துல இருந்து
உடனே கெளம்பிடனும்னு தோனுது.
ஆனா அப்படி போக முடியாதுன்றதுனால என்னால ஏதும் செய்ய முடியல. யாராவது கேள்வி கேட்டா பதில் சொல்ல பயமா இருக்கு, ஆனா என்ன சுத்தி பாதுகாப்புக்கு ஆளுங்க இருப்பாங்க யாரும் என்மேல கைய வக்க முடியாது அந்த அளவுக்கு எனக்கு பாதுகாப்பு உண்டு, இருந்தாலும் எனக்கு மனசுக்குள்ள பயமும் பதட்டமும் இருக்கு, இதுல இருந்து வெளிவர என்ன வழி டாக்டர் என்றார்,
அதுவும் இல்லாம நான் வெளிய கெளம்பனும்னு நெனக்கும்போது எனக்கு மோஷன் வருது, டாய்லட் போனா வெறும் காத்தும் கொஞ்சூண்டு மோஷனும் தான் வருது, ஆனா அதுக்கே கொறஞ்சபட்சம் முப்பது நிமிஷம் ஆயிடுது, இதனால அப்பாயின்மெண்ட்ஸ் எல்லாம் டிலே ஆகுது டாக்டர் என தொடர்ந்தார்.
என்னால எல்லாம் சமாளிக்க முடியுது, எனக்கு அந்த அளவுக்கு கட்ஸ்சும் பவரும் இருக்கு என்றவர், என்னைப்போல தைரியசாலியும் முடிவெடுக்கும் திறமையும் யாரும் கெடயாதுனு நெறைய பேர் சொல்லியிருக்காங்க டாக்டர், நானும் அப்படிப்பட்ட ஆள் தான், ஆனா இப்போது அந்த தைரியமும் திறமையும் எங்க போச்சுனே தெரியல, எனக்கு ரொம்ப கவலையா இருக்கு என் பெர்பார்மன்ஸ் பத்தி என்றார்.
அப்படி அவர் கூறிக்கொண்டிருக்கும்போது கூட அவரது கம்பீரமும், ஆளுமைத்தண்மையும் சிறிதளவும் குறையவில்லை. அவரையே நான் பார்த்துக்கொண்டிருந்தேன்.
அவர் தொடர்ந்தார்,
எனக்கு கொஞ்சம் கூட மனக்கவலை கிடையாது, நான் போடுற டிரஸ் எல்லாமே காஸ்ட்லி, நல்லா சாப்புடுறேன். நெறய காய்கறி பழங்கள் சாப்டரேன். தூக்கம் மட்டும் டிஸ்டர்ப் ஆகுது. உடம்புல வேற எந்த பிரச்சனையும் கெடயாது. ஆனா அந்த பயமும் படபடப்பும் வயிறு பிரச்சனயும் எப்புடி வந்துச்சினே தெரில டாக்டர் என்றார்.
நான் அப்போதும் அவரை அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்,
அவர் என்னை உற்று பார்த்தவாரே சொன்னார் – நான் இவ்ளோ சொல்லிட்டிருக்கேன் நீங்க கம்முனு இருக்கிங்களே என,
நான் புன்னகைத்தவாறே சொன்னேன்.
மேடம் கொஞ்ச நேரம் உங்க பதவியையும், கெளரவத்தையும், சமூக மரியாதையையும் விட்டுட்டு நீங்க நீங்களாவே இருங்க – என.
அவ்வளவு நேரம் மிகவும் கம்பீரமாக இருந்த அவர் சற்றே கண் கலங்க ஆரம்பித்தார்.
நான் தொடர்ந்தேன், மேடம் உங்கள பாத்தாலே தெரியுது நீங்க அரசு உயர்பதவில இருக்கீங்கனு என,
எப்படி உங்களுக்கு தெரியும் என்றார்,
அதற்கு நான் உங்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வந்த நபர் யூனிபார்ம் சர்வீஸ்ல இருக்கறவர் தானே என்று, ஆம் என்றார் அவர்.
சரி கொஞ்ச நேரம் நீங்க எல்லாத்தையும் மறந்துட்டு உங்க காலேஜ் லைப் பத்தி சொல்லுங்க என்றேன்.
அவரின் முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது.
நான் ரொம்ப நல்லா படிப்பேன் சார், ஸ்கூல்லயும் சரி, காலேஜ்லயும் சரி படிப்புலயும் ஸ்போர்ட்ஸ்லயும் நல்லா ஆக்டிவா இருப்பேன், ஸ்கூல் அண்ட் காலேஜ்ல நான் டாப்பர் சார் என்றார். எனக்கு நிறைய பிரண்ட்ஸ் இருந்தாங்க, எப்பவுமே நான் ரொம்ப கலகலப்பா இருப்பேன், அதனால என் பிரண்ட்ஸ்களுக்கு என்ன ரொம்ப பிடிக்கும், நான் நல்லா படிப்பேன்றதுனால டீச்சர்சும் என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க,
என் அப்பா அம்மாவும் என்மேல ரொம்ப பாசமா இருப்பாங்க, எது கேட்டாலும் வாங்கி தருவாங்க, என்ன ரொம்ப பிரீயா விட்டுடுவாங்க, எங்க போனாலும் எந்த கேள்வியும் கேக்கமாட்டாங்க. என் மேல அவ்ளோ நம்பிக்க என் அப்பா அம்மாக்கு என்றார்.
நான் டிகிரி முடிச்சவுடனே சிவில் சர்வீஸ் படிக்கணும்னு ஆசப்பட்டேன், அதுக்கு அவங்க எந்த மறுப்பும் சொல்லாம என்ன கோச்சிங் கிளாஸ்ல சேத்துவிட்டாங்க, நானும் பர்ஸ்ட் அட்டம்ப்ட் லயே சிவில் சர்விஸ் பாஸ் பண்ணேன். நல்ல இடத்துல போஸ்டிங் கெடச்சது. நான் சிவில் சர்வீஸ் படிக்கும்போதே கூட படிச்ச ஒருத்தர லவ் பன்னேன். அவரும் என்ன லவ் பண்ணாரு, ஆனா நான் சிங்கிள் அட்டம்ப்ட்ல பாஸ் பண்ணி வந்துட்டேன். அவர் 3 டைம்ஸ் அட்டன் பண்ணி பாஸ் பண்ணாரு. அவருக்கும் போஸ்டிங் கெடச்சது ஆனா என்ன விட கிரேட் கம்மி. அவருக்கு போஸ்டிங் கெடச்ச கொஞ்ச மாசத்துல எங்க வீட்டு சம்மதத்தோட கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.
ஆரம்பத்துல சந்தோசமா போச்சி, அப்புறம் குழந்தை தங்கிச்சி, குழந்தையும் நல்லபடியா பொறந்துச்சி. அதுக்கப்புறம் தான் பிரச்சன ஆரம்பிச்ச மாதிரி இருக்கு எனக்கு டாக்டர் என்றார் அவர்.
நான் தொடர்ந்து சொல்லுங்க என்றேன்.
மீண்டும் அவரின் கண்கள் கலங்க ஆரம்பித்தது
குழந்த பொறக்கறதுக்கு முன்னாடி நாங்க ரொம்ப அன்யோன்யமா இருப்போம், ஆனா இப்ப அப்படி இல்ல என்றார்.
காரணம் என்ன என நான் கேட்டேன்.
எங்க ரெண்டு பேருக்குமே ஒர்க் பிரஷர் அதிகமா இருக்கு, வீட்டுக்கு எப்பவுமே ஆளுங்க வந்துட்டு போயிட்டே இருப்பாங்க, போன் கால்ஸ் வந்துட்டே இருக்கும், காலையிலயே வேல ஆரம்பிச்சுடும், சில நேரத்துல கொழந்தைய பாக்க கூட நேரம் இருக்காது ரெண்டுபேருக்கும் என்றார்.
மேலும் எங்க ரெண்டு பேருக்கும் பிரைவசியே இல்ல, நான் கொஞ்சம் பிரீயா இருந்தா அவர் என்கேஜ்டா இருப்பார், அவர் பிரீயா இருந்தா நான் பிஸியா இருப்பேன். லீவ் போடலாம்னு பாத்தா எங்க போஸ்டிங் ரொம்ப ரெஸ்பான்சிபிலான போஸ்டிங் தேவையில்லாம லீவ் போடமுடியாது. அதனால ரொம்ப பிரஷரா இருக்கு டாக்டர் என்றார்.
அமைதியாக கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது நான் கேள்விகளை கேட்கலாமா என்றேன்,
கேளுங்க சார் என்றார் அவர்.
உங்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்றேன் நேரடியாக,
அதுவரை கம்பீரமாகவும் சிறிது கண்கலங்கியவாறும் பதில் சொல்லிக்கொண்டிருந்த அவர் சட்டென்று உடைந்துபோய் அழ ஆரம்பித்துவிட்டார்,
மிகவும் கம்பீரத்துடனும் ஆளுமைத்தண்மையுடனும் உள்ள ஒரு பெண்ணை அழுகையில் பார்த்தால் எப்படி இருக்கும்!
நான் மிகவும் அமைதியாக அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன், அழ வேண்டாம் என நான் ஆறுதல் கூறவில்லை,
அவர் நன்றாக அழவேண்டும், அப்போது தான் அவரின் சுய தன்மை வெளிப்படும், இயல்பாக இருப்பார் என எண்ணி அவரையே அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
கிட்டத்தட்ட இருபது நிமிஷங்கள் அவர் தொடர்ந்து அழுதபடியே இருந்தார், நானும் அவரை ஏதும் கேட்கவில்லை, நேரமும் போய்க்கொண்டிருந்தது.
பிறகு டிஷ்யூ பேப்பர் எடுத்து முகத்தை நன்றாக துடைத்துவிட்டு, என்னைப்பார்த்து ஒரு சோக புன்னகையுடன் ஐயாம் வெரி சாரி டாக்டர் என்றார்.
நான் இட்ஸ் ஓகே மேடம் நோ இஷ்யூஸ் கண்டினியூ என்றேன்,
இதுக்குதான் டாக்டர் நான் யாரிடமும் எந்தவிஷயத்தையும் ஷேர் செய்யறதில்ல என்றார்.
ஏன் என்றேன் நான்.
என் சோகத்தையும் உணர்வுகளையும் நான் ஷேர் செய்தால் எங்கே நான் அழுதுடுவனோன்ற பயந்தான் டாக்டர் என்றார் அவர்.
நான் புன்னகைத்தபடியே எங்க நீங்க இன்னும் என்கிட்ட கூட ஷேர் பண்ணலயே என்றேன்.
அதற்கு அவர் சாரி டாக்டர் அதை சொல்ல வரும்போதுதான் என்ன அறியாம நான் அழுதுட்டேன் என்றார்.
பரவால்ல நோ ப்ராப்ளம் என்றேன் நான்.
மீண்டும் கலங்கிய கண்களை துடைத்தபடியே அவர் பேசத்தொடங்கினார்,
டாக்டர் எனக்கு ரொமாண்டிக் சாங்ஸ், ரொமாண்டிக் சீன்ஸ்லாம் ரொம்ப பிடிக்கும், ஆனால் போஸ்டிங் வாங்கனதிலருந்து
நான் சினிமா டிவி பாக்கறதையே விட்டுட்டேன்,
அப்படியே பாத்தாலும் வெறும் நியூஸ் தான் பாக்கறது. உடம்பு உணர்ச்சியும் மரத்துடிச்சி
டாக்டர் என்றார்.
அவர் தொடரட்டும் என நான் பேசாமல் அவரையே கவனித்துக்கொண்டிருந்தேன்,
அவர் மேலும் பேச ஆரம்பித்தார்.
கல்யானமான புதுசுல எங்க ரெண்டுபேருக்கும் செக்சுல ரொம்ப ஆர்வம் இருந்திச்சி, எவ்ளோ வேலையா இருந்தாலும்
நாங்க ரொமான்சுக்குனு
தனியா நேரம் ஒதுக்கிடுவோம், கொஞ்ச மாசங்க கழிச்சி வேலை பளுனாலயும் கொழந்த தங்கனதுனாலயும் செக்சுல படிப்படியா ரெண்டுபேருக்குமே
ஆர்வம் கொரஞ்சிடுச்சி.
கொழந்த பொறந்ததுக்கப்புறம் எனக்கு கொழந்தைய பாத்துக்கறதுல
நெறய நேரம் செலவானதுனால
அவர என்னால சரியா கவனிக்கமுடில. அப்போ அவர் கொஞ்சம் கொஞ்சமா குடிக்க ஆரம்பிச்சாரு.
ஏன் குடிக்கறீங்கனு கேட்டதுக்கு
உனக்கே தெரியாதா தெனம் தெனம் எவ்ளோ பிரச்சனை வேலை பளு, ரெக்கமண்டேசன்,
டார்ச்சர், பொலிடிக்கல்
பிரஷர்னு முடியலன்னார். எங்க வேலையின் கஷ்டங்கள் எனக்கும் தெரிஞ்சதுனால
சரி அதுலயாவது அவர் ரிலாக்ஸ் ஆகட்டும்னு விட்டுட்டேன்.
செபாட்டிகல்
லீவ் முடிஞ்சி நானும் வேலைக்கு போக ஆரம்பிச்சேன். வருஷங்க போறதே தெரியல.
வேலை பளுனால எங்களுக்குள்ள
ரொமான்சும், பேசிக்கறதும்,
செக்சும் சுத்தமா கொறஞ்சிபோச்சி. ஆனா அதனோட பாதிப்பு அப்ப எனக்கு தெரியல.
மூணு வருஷம் முன்னாடி எனக்கு ஏதோ பண்றமாதிரி இருந்தது. என்ன காரணம்னு என்னால கண்டுபிடிக்கமுடியல. என்ன பண்ணுதுனும் சொல்ல தெரியல. நாள் ஆக ஆக எனக்குள்ள ஏதோ பிரச்சனை இருக்குனு புரிய ஆரம்பிச்சது.
ஆனா வெளிய சொன்னா என் இமேஜ் டேமேஜ் ஆயிடுமோனு நான் யார் கிட்டயும் சொல்லல.
அப்புறம் தான் தெரிஞ்சது என் உடம்பு ரொமான்சுக்கும்
செக்சுக்கும் ஏங்குதுனு. அது தெரிஞ்சு நான் என் ஹஸ்பெண்ட்கிட்ட போனா அவர் டிரிங்ஸ் யூஸ்பண்ணிட்டு
தூங்கிடுவார், என்ன கண்டுக்கவே இல்ல. திரும்பவும் அவர்கிட்ட இத பத்தி பேசப்போனா அவரோ எனக்கு ரொம்ப வேல இருக்குடா செல்லம், எனக்கு நேரமே இல்லட்டா செல்லம்னு தவிர்த்துடரார்.
அவர் என்னவிட பதவியில ரேங்க் கம்மிதான் ஆனாலும், நானே நேரம் ஒதுக்கி அவர்கிட்ட போனா அவரோ அவரோட வேலைபளுவ காமிச்சி என்ன தவிர்த்துடரார். இதனால அந்த நேரத்துல எனக்கு மனசு கஷ்டமா இருந்தாலும்
எனக்கும் தொடர்ந்து வேல இருக்கறதுனால மைண்ட டைவர்ட் பண்ணி வொர்க் பண்ண ஆரம்பிச்சிடுவேன். இப்படித்தான்
என் லைப் போய்ட்டிருக்கு
என்றார்.
ஏன் எங்கயாவது வெகேஷன் போய்ட்டு வரலாமே நீங்கள் என்றேன் நான்,
அதற்கும் பிளான் பண்ணி கடந்த வருஷம் 5
நாட்கள் வெகேஷன் போனோம். ஆனா அங்க போயும் அவர் டிரிங்ஸ் யூஸ்பண்ணிட்டு
தூங்கிடரதால ஒண்ணுமே நடக்கல. ஒரே ஒருமுறை டிரை பண்ணாரு ஆனால் அவருக்கு குயிக்கா விந்து வந்துட்டதால
அதுக்கப்புறம் டிரை பண்ணல. எனக்கு ரொம்ப ஏமாற்றமா போச்சி என்றார் அவர்.
நான் எந்த அளவுக்கு செக்சுவலா ஆக்டிவாவும் இண்ட்ரஸ்டிங்காவும் இருந்தனோ அந்த அளவுக்கு இப்போ எரிச்சலாவும் ஏமாற்றமாவும்
இருக்கு என்றார்.
அதன் பிறகு அவரின் பிரச்சனையின் தன்மை குறித்து விவரித்தேன்
நான், நீங்கள் காலேஜ் படிக்கும்போது மிக ஜாலியான கேரக்டர், அந்த சந்தோசமும் உங்களை வெளிப்படுத்தும் தண்மையும் தற்போது சுத்தமாக போய்விட்டது. அதுவுமில்லாம
உங்களின் மனதிற்கு நெருங்கிய நட்பு வட்டாரமும் இல்லாமல் போய்விட்டது. மேலும் உங்களுக்கு விருப்பமான ரொமாண்டிக் படங்களையும்
பாடல்களையும் நீங்கள் கேட்க நேரமில்லாததால்
நீங்கள் மெஷின் மாதிரி இயங்க தொடங்கிவிட்டீங்க என்றேன்.
ஆம் டாக்டர் உண்மைதான் என்றார் அவர்.
நான் தொடர்ந்தேன், மேலும் உங்களுக்கு விருப்பமான செக்ஸ் சுகமும் நீங்கள் விரும்பியபோது
கிடைக்காத்தால் உங்களின் ஆழ் மனதில் மிகுந்த ஏமாற்றமும் வெற்றிடமும்
ஏற்பட்டுவிட்டது. அதனால் உங்களின் மனதில் ஒருவிதமான வெறுப்புத்தன்மையும் அதன் உளவியல் ரீதியான தொடர்ச்சியாக
பயமும் பதட்டமும் ஏற்ப்பட்டது. அது உங்களுக்கு இன்செக்யூரிட்டி
பீலிங்கை ஏற்படுத்தியதால்
தான் உங்களுக்கு எவ்வளவு பாதுகாப்பிருந்தாலும் உள்ளுக்குள்
பயம் ஏற்படுகிறது என்றேன்.
செக்சை தவிர்த்ததால் உடலில் சுரக்கக்கூடிய செக்ஸ் ஹார்மோன்கள் சரிவர சுரக்கவில்லை, அதனால் மனதிலும் உடலிலும் தேவையற்ற பிரச்சனை வருகிறது என்று கூறி அவரின் கணவரையும் கவுன்சிலிங்கிற்கு வர சொன்னேன், அவரிடம் பேசிவிட்டு பிறகு உங்களிடம் பேசுகிறேன் என்றேன்,
அவரும் தேங்ஸ் டாக்டர் என சொல்லிவிட்டு, ரொம்ப நாள் கழிச்சி இப்பதான் என் மனசு ரொம்ப பிரீயா இருக்கறமாதிரி
பீல் பன்றேன். என புன்னகையுடன் கூறி விட்டு சென்றார்.
கிட்டத்தட்ட
இரண்டு வாரங்களுக்கு
பிறகு அவரின் கணவர் முன் அனுமதியுடன் என்னைப்பார்க்க
வந்தார், அவரிடம் மேலோட்டமாக தேவையான விஷயங்களைப்பற்றி மட்டும் கூறினேன். அவரும் பலரின் பிரச்சனைகள பார்த்துக்கொண்டிருப்பவர் ஆகையால் உடனே பிரச்சனையின் சாரம்சத்தை புரிந்துகொண்டு விரைவில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்கிறேன் என்று கூறிவிட்டு சென்றார்.
ஒரு வாரம் கழித்து அந்த பெண் திரும்பவும்
வந்தார். , மிகவும்
இயல்பாக ஹாய் டாக்டர் ஹவ் ஆர் யூ என புன்னகையுடன் கேட்டார். இப்போது அவரிடம் மிடுக்கு இல்லை, கம்பீரம் இல்லை, ஆளுமைத்தன்மையை வெளிப்படுத்தவில்லை. அவரது பாடி லாங்வேஜ் மிகவும் இயல்பாக நண்பர்கள் முன்னிலையிலும் குடும்பத்தார்
முன்னிலையிலும் எப்படி இருப்போமோ அப்படி இருந்தது.
நானும் எப்படி இருக்கீங்க என்றேன்,
நான் ரொம்ப ஹேப்பி டாக்டர், இப்போ அவர் என்கூட ரொம்ப டைம் ஸ்பெண்ட் பண்றார், யூ நோ நாங்க 3
டேஸ் முன்னாடி அவுட்டிங் கூட போய்ட்டு வந்தோம். எகெய்ன் தேங்க்யூ என்றார்.
நான் அவரிடம் அவரின் பிரச்சனைகளின் தன்மையை கூறிவிட்டு, அவர் எப்படியெல்லாம் மாறவேண்டுமோ
அந்த ஆலோசனைகளையும் பிரச்சனைகளை
எப்படி உளவியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டும் என்ற ஐடியாவை அவரிடம் சொன்னேன். அவரும் புன்னகையுடன்
கேட்டுக்கொண்டார்.
திரும்ப ஏதாவது ஆலாசனை தேவைப்பட்டால் மட்டும் வாங்க ஆல் த பெஸ்ட் என்றேன்.
அவரும் சீ யூ டாக்டர் பை பை என கூறிவிட்டு சென்றுவிட்டார்.
செக்ஸை தவிர்ப்பதனால் ஆண் /
பெண் இருவருக்குமே மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல பிரச்சனைகள் வரலாம், இது எந்த பதவியில் இருந்தாலும், மிகப்பெரிய பணக்காரராக இருந்தாலும்
வரும். எனவே செக்ஸ் வாழ்க்கையை எந்த அளவுக்கு அனுபவிக்கமுடியுமோ அந்த அளவிற்கு அனுபவியுங்கள்.
இரண்டு மாதங்களுக்கு பிறகு ஒரு போன் கால்
டாக்டர் நான் தான் ----- பேசுறேன்,
எப்படி இருக்கீங்க என்றார், நானும் நலமாக இருக்கிறேன்
என்றேன்,
ஒரு சந்தோஷமான விஷயம் இன்னும் இதை அவர் கிட்ட கூட சொல்லல பர்ஸ்ட் உங்ககிட்ட தான் சொல்லனும்னு தோனுச்சி என்றவர் –
எனக்கு 50 நாட்கள்
தள்ளிப்போயிருக்கு – இப்போதான் டெஸ்ட் பண்ணி கன்பர்ம் ஆச்சு என்றார்.
இறைவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
மரு.த.செந்தில் குமார்,
ஹோமியோ & உளவியல் ஆலோசகர்,
விவேகானந்தா கிளினிக்
வேளச்சேரி, சென்னை,
Call 9443054168 / 9786901830