தைராய்டு
தைராய்டு சுரப்பியினை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Ø
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.
Ø
இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும்.
Ø
இந்த சுரப்பியின் முதன்மைப் பணியானது, உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்துவதாகும்.
Ø
உடலின் வளர்சிதை மாற்றங்களை கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி தைராய்டு என்னும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
Ø
இந்த ஹார்மோன் உடலில் உள்ள செல்கள் எந்த அளவு சக்தியினை பயன்படுத்த வேண்டும் என்பதனை முடிவுசெய்கிறது.
Ø
நன்கு செயல்படும் தைராய்டு சுரப்பியானது தேவையான அளவு தைராய்டு ஹார்மோனை சுரக்கச்செய்கிறது.
Ø
இரத்தத்திலுள்ள தைராய்டு ஹார்மோனின் அளவினை, பிட்யூட்டரி எனப்படும் சுரப்பி கண்காணித்து அதனை கட்டுப்படுத்துகிறது.
Ø
இந்த பிட்யூட்டரி சுரப்பியானது மூளைக்கு கீழே மண்டையோட்டின் மையத்தில் அமைந்துள்ளது.
Ø
இரத்தத்தில் தைராய்டு ஹார்மோன் அளவு குறைவது மற்றும் அதிகரிப்பதை கண்டுணர்ந்து, தைராய்டு சுரப்பியின் செயலை கட்டுப்படுத்தும்/சரிசெய்யும் டி.எஸ்.எச் எனும் ஹார்மோனை சுரக்கிறது.
தைராய்டு நோய் என்றால் என்ன?
தைராய்டு சுரப்பி, தைராய்டு ஹார்மோனை அதிகளவில் சுரக்கும்போது, உடல் சாதாரணமாக இருக்கும்போது பயன்படுத்தும் சக்தியினைவிட, அதிகளவு சக்தியினை விரைவாக பயன்படுத்தும். இந்த நிலை Hyperthyroidism
- ஹைப்பர்தைராய்டிஸம் (அதிகளவு ஹார்மோன் சுரப்பதினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்) எனப்படும்.
தைராய்டு ஹார்மோன் குறைந்த அளவு சுரக்கும்போது, நம் உடல் எப்பொழுதும் விட குறைந்த அளவு சக்தியினை மெதுவாகப் பயன்படுத்தும். இந்த நிலையினை Hypothyroidism - ஹைப்போ தைராய்டிஸம் என்பர்.
தைராய்டு நோய் யாரை பாதிக்கும்?
எல்லா வயதினை சார்ந்தவர்களும் இந்த தைராய்டு நோய்களினால் பாதிக்கப்படக்கூடும். ஆகிலும் பாதிப்படையும் நிலைமை ஆண்களைவிட பெண்களுக்கு 5 முதல் 8 மடங்கு அதிகம்.
தைராய்டு நோய் எதனால் ஏற்படுகிறது?
தைராய்டு நோய் ஏற்பட பல வித்தியாசமான காரணங்கள் உண்டு.
ஹைப்போதைராய்டிஸ்சத்தை ஏற்படுத்தும் நிலைமைகள்.
Ø
Thyroiditis தைராய்டைடிஸ் என்பது தைராய்டு சுரப்பி வீ’க்கமடைவதாகும். இதனால் தைராய்டு ஹார்மோன் சுரப்பது குறைகிறது.
Ø
Hashimoto's Thyroiditis ஹாஷிமோட்டோஸ் தைராய்டைடிஸ் என்பது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் வலியில்லாத நோயாகும். இது பரம்பரை வியாதி.
Ø
Post Partum Thyroiditis போஸ்ட்பார்டம் தைராய்டைடிஸ் என்பது 5 முதல் 7 சதம் பெண்களில் குழந்தை பெற்றபின் ஏற்படக்கூடிய ஒரு தற்காலிகமான நோய்.
Ø
Iodine Deficiency ஐயோடின் குறைபாடு. இந்த பிரச்சினையினால் உலகமுழுவதும் தோராயமாக 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தைராய்டு சுரப்பி தைராய்டு ஹார்மோனை சுரக்க ஐயோடினை பயன்படுத்துகிறது.
Ø
Inactive Thyroid Gland செயல்படாத தைராய்டு சுரப்பி. இந்த நிலை பிறக்கும் 4000 குழந்தைகளில் ஒரு குழந்தையினைப் பாதிக்கிறது. இந்த பிரச்சினையினை சரிசெய்யாவிட்டால் அந்த குழந்தை உடல் மற்றும் மூளைவளர்ச்சி குன்றி காணப்படும்.
அதிகப்படி தைராய்டு சுரப்பு (ஹைப்பர்தைராய்டிஸம்) ஏற்படுத்தும் நிலமைகள்.
Ø
Graves Diseases க்ரேவ் நோய் - இதில் முழு தைராய்டு சுரப்பியும் அதிகளவில் செயல்பட்டு அதிகளவு தைராய்டு ஹார்மோனினை சுரக்கும்.
Ø
Thyroiditis தைராய்டைடிஸ் - இதில் வலி இருக்கும் அல்லது வலி இல்லாமலிருக்கும். தைராய்டு சுரப்பியில் சேமித்துள்ள ஹார்மோனை வெளியேற்றுவதால், சிலவாரங்கள் அல்லது மாதங்கள் ஹைபர்தைராய்டிஸ்சத்தினை ஏற்படுத்தும்.
Ø
Iodine Overdose அதிகளவு ஐயோடின். சில மருந்துகளில் அதிகளவில் ஐயோடின் காணப்படுவதால் அவை சில நபர்களுக்கு தைராய்டு ஹார்மோன் சுரப்பதனை அதிகரிக்கும் அல்லது குறைக்கும்.
Symptoms of Hypothyroidism - ஹைப்போதைராய்டிஸ்சத்தின்
அறிகுறிகள்.
ü
சோர்வு - Tiredness
ü
அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல் அதன்மூலம் அதிக இரத்தப்போக்கு ஏற்படுதல். Frequent Menstrual cycle, Over Bleeding,
ü
மறதி. Loss of Memory
ü
உடல் எடை கூடுதல் – Weight Gain, Obesity,
ü
உலர்ந்த, தடியான தோல் மற்றும் உரோமம். Dry thick skin and hair,
ü
கரகரப்பான குரல் – Hoarseness of Voice
ü
குளிரினை பொறுத்துக்கொள்ள முடியாது. – Not able to tolerate Chill,
Symptoms of Hyperthyroidism
ஹைப்பர்தைராய்டிஸ்சத்தின் அறிகுறிகள்.
ü
எரிச்சல் / படபடப்பு – Irritability, Anger, Palpitation,
ü
தசைகளின் பலவீனம் / நடுக்கம் Weakness of Muscles and Shivering
Tremor,
ü
தூக்கமின்மை – Sleeplessness,
ü
தைராய்டு சுரப்பி வீங்குதல் – Swelling in Thyroid Gland,
ü
கண்களில் எரிச்சல் அல்லது பார்வை கோளாறு – Burning sensation in Eyes or Visual
problems,
ü
வெப்ப உணர்வு அதிகரித்தல் – Body Heat
சிகிச்சை,
தைராய்டு நோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அதற்காக சிகிச்சையினை மேற்கொண்டு நோயின் அடையாளங்கள் ஏற்படும் முன்னரே இதனை கட்டுப்படுத்தலாம். தைராய்டு நோய்கள் வாழ்க்கையின் நீண்ட நாட்கள் இருக்கும் ஒரு பிரச்சினை. இதனை சரியாய் கையாள்வதினால் தைராய்டு நோய் உள்ளவர் ஆரோக்கியமாக மற்றவர்களைப் போல வாழலாம்.
தைராய்டு பிரச்சனைகள் ஓமியோபதி சிகிச்சை,
தைராய்டு நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்:
consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் :
consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குழந்தையின்மை – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==