உங்கள் தோலை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் தோலும், உங்கள் உடம்பின் ஒரு பகுதி என்பது உங்களுக்குத் தெரியுமா?
Ø
உங்கள் உடல் உறுப்புகளிலேயே மிகவும் பரந்த அளவுக்கும் கண்ணுக்குத் தெரியும் விதத்திலும் அமைந்திருப்பது தோல் மட்டும்தான். அத்தோடு மிகவும் சிக்கலான அமைப்பையும் உடலின் மற்ற உறுப்புகளோடு தொடர்புகொண்டும் இருப்பது தோல் ஆகும்.
Ø
உடலின் உள்ளுறுப்புகள் புற பாதிப்புகளால் தாக்கப்படாமல் இருக்கும் கேடயமாகத் தோல் செயல்படுகிறது.
Ø
நோய், தொற்று மற்றும் புறச் சூழல்களான வெயில், காற்று, மழை ஆகியவற்றிலிருந்து உடல் உறுப்புகளைத் தோல் பாதுகாக்கிறது.
Ø
உங்கள் தோற்றத்தை வடிவமைப்பதிலும் தோல் முக்கியப் பங்கு வகிக்கிறது.
Ø
உங்கள் தோலைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதன் மூலம், உங்களைச் சுகாதாரமாகவும் வலிமையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறீர்கள். அத்தோடு தோல் தன் பணியைச் செவ்வனே செய்ய வழிவகுக்கிறீர்கள்.
தோலின் செயல்பாடுகள்
உங்கள் தோல் எத்தனை விதமான எதிர்ப்புகளைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
¬
உங்கள் உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் பாக்டீரியா, வைரஸ், ஒவ்வாமையை ஏற்படுத்தும் கிருமிகள் ஆகியவற்றோடு நேரடித் தொடர்புகொண்டிருப்பதால், அவற்றை எதிர்த்துப் போரிட்டு உங்கள் உடலைப் பாதுகாக்கும் பணியைத் தோல் செய்கிறது.
¬
உங்கள் உடலின் வெப்பநிலையைச் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. உதாரணமாக, நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போது உங்களுக்கு அதிகமாக வியர்கிறது. அதன் மூலம் உங்கள் உடலைத் தோல் குளிரச்செய்கிறது.
¬
புறச் சூழல் காரணிகளான வெயில், காற்று, வெப்பம், வறண்ட தண்மை, குளிர், மாசுகேடு, சிகரெட் புகை போன்றவற்றின் பாதிப்புகளையும் தோல் தாங்கிக்கொள்கிறது.
¬
இவை அனைத்தும் தோலை நேரடியாகப் பாதிப்பதால், அதன் பாதுகாப்பு சக்தியை இவை குறைக்கக் கூடும்.
உங்களுடைய தோலைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள, சில எளிய வழிமுறைகள்:
ü
உங்கள் தோல் சாதாரணமாகவோ அல்லது வறண்டோ இருந்தால், அதை ஈரப்பசை உள்ளதாகச் செய்யும் அல்லது வறண்டுபோகாமல் இருக்கச்செய்யும் கிரீம்களைப் பயன்படுத்துங்கள்.
ü
தோல் புற்றுநோய் வராமல் தடுக்க, தினமும் சூரியஒளியிலிருந்து பாதுகாப்பளிக்கும் (எஸ் பி எஃப் 15 அல்லது அதற்கு மேற்பட்ட ) சன்ஸ்கிரீன் பயன்படுத்துங்கள்.
ü
சூரியஒளியிலிருந்து தோலைப் பாதுகாக்கும் விதத்தில் உடை அணிந்துகொள்ளுங்கள்.
ü
சூரியக்குளியலை அளவாக வைத்துக்கொள்ளுங்கள்.
ü
பாத்திரம் கழுவும்போதோ அல்லது இரசாயனப் பொருட்கள், சோப்புத்தூள் ஆகியவற்றைப் பயன்படுத்தும்போதோ அல்லது கைகளைப் பாதிக்கும் பணியைச் செய்யும்போதோ கட்டாயம் கையுறைகளை அணிந்துகொள்ளுங்கள்.
பொதுவாக வரும் தோல் நோய்கள்
பரு – Acne – Pimples
v
உடலின் மேல் பகுதியில், இடுப்புக்கு மேலே தோன்றும் பரு, கட்டி, போன்றவற்றைப் பரு என்று சொல்லலாம். பருவ வயதினருக்குத்தான் பெரும்பாலும் பரு வருகிறது என்றாலும், மற்றவர்களுக்கும் வரலாம். தோல் தொடர்பான பிரச்சனைகளில், பருவே மிக அதிக அளவில் சிகிச்சைக்கு உட்படுகிறது என்பதை ஒரு மருத்துவக் கணக்கெடுப்பு கண்டுபிடித்துள்ளது. ஓமியோபதி மருத்துவத்தின் மூலம் பருவை எளிதாகக் குணப்படுத்திவிடலாம்.
சேற்றுப்புண் – Fungal Infection
v
பூஞ்சணத் தொற்றால் ஏற்படுவதே சேற்றுப்புண். தொடர்ந்து ஈரம் படுதல், அதிக வியர்வை, இறுக்கமான காலணி மற்றும் காலுறை அணிதல் போன்ற காரணங்களால், உங்கள் காலின் விரல் இடுக்குகளில் காளான் வளர்ந்து, அதுவே சேற்றுப்புண்ணாக மாறுகிறது. இது மீண்டும் மீண்டும் வரலாம். ஓமியோபதி மருத்துவத்தின் மூலம் மீண்டும் மீண்டும் வருவதை தடுக்கலாம்
கொப்புளம் புண் – Blisters - Ulcers
v
ஒருவரின் உடலில், இவ்வகைப் புண்கள் உடலின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வரலாம். இதற்குக் காரணம் ஹெர்ப்ஸ் சிம்பளக்ஸ் வைரஸ் – ஹெச் எஸ் வி HSV ' கிருமிகளே ஆகும். இதில் இரண்டு வகை வைரஸ் கிருமிகள் உள்ளன. முதல் வகை கிருமி மூலம் புண்கள் கடைவாய் ஓரத்திலும் நாசியின் அடிப்பகுதி மற்றும் ஓரம் ஆகிய இடங்களிலும் வரும். இரண்டாவது வகை கிருமி மூலம் பிட்டத்தின் நடுப்பகுதி மற்றும் பிறப்புறுப்புக்களை சுற்றியும் புண்கள் தோன்றும். பெரும்பாலும் இவ்வகைப் புண்களில் நீர் கசிவது போன்று இருக்கும்.
முடி உதிர்தல் – Hair Falling
v
பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு முடி அதிகமாக உதிர்ந்தாலும் மரபணுவே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. சிலருக்கு இளம் வழுக்கை வருவதை தடுக்கவும் முடி நன்கு வளரவும் ஓமியோ மருத்துவம் பயன்படுகிறது.
தடிப்புகள் – Eruptions
v
ஒருவருக்குத் திடீரென்று உடலில் தடிப்புகள் தோன்றலாம். அவை லேசான சிவந்த நிறக் கட்டிகள் போல் இருக்கும். இவை தோல் இருக்கும் பகுதியில் எங்கு வேண்டுமானாலும் வரலாம். இந்தத் தடிப்புகள் சில மணி நேரம் இருந்துவிட்டு, பின்னர் மறைந்துவிடும். தடிப்பு வந்த இடத்தில் எந்த வடுவும் இருக்காது. இந்தத் தடிப்புகள் தோன்றிய இடத்தில் வழக்கமாக அரிப்பும் எரிச்சலும் இருக்கும். உணவு, மருந்து, வேறு சில பொருட்கள் போன்றவை உங்கள் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்றால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாகத் தடிப்புகள் ஏற்படுகின்றன.
நகம் தொடர்பான பிரச்சனைகள் – Nail Problems
v
நகம் உங்கள் ஆரோக்கியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனற் பழமொழி ஒன்று உண்டு. கை அல்லது கால் நகத்தில் ஏதாவது பிரச்சனை தோன்றினால், அது உடலில் வரும் நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். நகம் கடினமாகவோ அல்ல வளைந்தோ காணப்பட்டால் மருத்துவரிடம் உடனடியாகக் காட்டுங்கள். அது போலவே நகத்தில் வெள்ளை அல்லது சிவப்புப் புள்ளிகள், கோடுகள் போன்றவை காணப்பட்டாலும் மருத்துவரிடம் காட்டுவது அவசியம்.
மீன் செதில் சொறி - Psoriasis
v
'யானைச்சொறி' என்று அழைக்கப்படும் இந்தத் தோல் நோய் ஆங்கிலத்தில் 'சோரியாசிஸ்' என்று அழைக்கப்படுகிறது. 'அரிப்பு' என்று பொருள்படும் கிரேக்கக் சொல்லில் இருந்து இந்த ஆங்கிலப் பெயர் வந்தது. இது ஒரு மிகக் கடுமையான ஒரு தோல் நோய் ஆகும். உடலில் தோல் சிவந்தும், வெள்ளி நிறச் செதிள்கள் நிறைந்த அடுக்குகளாகவும் மாறுகிறது. இந்த யானைச்செறி பெரும்பாலும் மண்டை, மூட்டுகள், முதுகுப் பகுதி போன்ற இடங்களைப் பாதிக்கிறது.
சினப்புகள் – Dermatitis
v
உடலில் சிவந்து தடித்தும் காணப்படும் பகுதியே சினப்புகள் என்று அழைக்கப்படுகின்றன. ஒவ்வாமை, உராய்தல், தொடர்ந்து வெயில் அல்லது ஈரம் படுதல், அரிக்கக்கூடிய பொருள்கள் அல்லது இரசாயனப் பொருள்கள் படுதல் போன்றவற்றின் காரணமாக தோலில் சினப்புகள் தோன்றலாம். இவற்றில் 'கை சினப்பு' என்ற ஒருவகை உண்டு. இவர்களின் கைப்பகுதி முதலில் வறண்டு இருக்கு; பிறகு சிவந்து வீங்கிக் காணப்படும்.
பாலுண்ணிகள் – Molascum Contagium
v
வைரஸ் கிருமியால் பாலுண்ணிகள் தோன்றுகின்றன. உடலில் வழக்கமாக வரும் நான்கு வகைப் பாலுண்ணிகள் கை, பாதம், விரல் இடுக்கு மற்றும் பாதத்தின் அடிப்பகுதி, பிறப்புறுப்புகள் ஆகிய இடங்களில் வருகின்றன. பாலுண்ணிகள் தோலின் நிறத்தை ஒத்தே, கடினமான புடைப்பாக இருக்கின்றன.
தோல் நோய்க்கான ஓமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
தோல் நோய், ஸ்கின் பிராப்ளம், ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் தோல், ஸ்கின் பிரச்சனை
நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – சொரியாசிஸ் – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==