சமீபத்தில் என்னிடம் ஒரு தம்பதியினர் ஆலோசனைக்கு வந்தனர், அப்போது அந்த பெண் கூறியதாவது,
எனக்கு திருமணமாகி நான்கு வருடங்களாகி விட்டன. ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. எனது கணவர் சர்வதேச நிறுவனத்தில் நல்ல பதவியில் இருக்கிறார்.
எனது கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்கள் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை முடிந்த அளவு நிறைவேற்றி வருகிறேன். எனக்கு சுரமாக இருந்த நேரத்தில் கூட அவருடன் பலமுறை உடலுறவு வைத்துள்ளேன்.
ஆனால் மாதவிடாயின் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் எனக்கு வலி இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். காண்டம் போட்டுக்கொண்டு உறவு கொள்கிறேன் என்று என்னை வற்புறுத்துவார்..
அவருடைய உடலுறவு வேட்கையை பார்த்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். உடலுறவுக்குபின் எனக்கு அதிகமாக உதிரப்போக்கு வரும். எனக்கு நானே கட்டுப்படுத்திக்கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் அந்த சமயத்தில் வேண்டாம் என பலமுறை சொல்லியிருக்கிறேன். ஆனால் அவர் கேட்பதே இல்லை.
அவரோ எனக்கு எல்லாம் தெரியும். அந்த நாட்களில் உறவு வைக்கலாம். என் நண்பர்கள் அப்படி வைத்துள்ளார்களாம் என்று சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், விபச்சாரியிடம் படுத்துவிட்டு எனக்கு ப்ரீயாக பால்வினை நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்
அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன் என்ன செய்வது? என்றாள்.
அவளின் கணவனிடம் இதை பற்றி கேட்டதற்கு, தனக்கு உடலுறவில் மிகுந்த விருப்பம் என்றும், மாதவிடாயின் போது உடலுறவு கொள்வதும் எனக்கு பிடிக்கும் என்றும் கூறினான்.
அதற்கு நான் மாதவிடாயின் போது பெண்ணின் விருப்பமின்றி உடலுறவு கொள்வது சரியல்ல என்றும், இது உங்களின் மேல் அதிக வெறுப்பை வரவழைக்கும் என்றுகூறி கீழ்கண்ட ஆலோசனைகளை வழங்கினேன்.
குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு புரிதல் வேண்டும்,
ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் புரிந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் முக்கியமானது. விட்டுக்கொடுத்து வாழுங்கள்,
மனைவியின் உடல்நிலையில் கணவன் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.
படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, மாதவிடாயின் அந்த மூன்று நாட்களின் போது முகம் சுழிக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதே இல்லை.
பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். சமையல் அறைக்கும், பூஜை அறைக்கும் செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் ஓய்விற்கான மறைமுகவழிகள்தான்.
ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்களோ
ஏற்கனவே குழம்பி போயிருப்பவரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை சொல்லி உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று உங்களை உசுப்பேற்றி விடுவார்கள்.
உங்களின் வாழ்க்கையில் இன்ப துன்பத்தில் பங்குகொள்ளும் மனைவியின் வேதனையை புரிந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் அருள்வாக்காக எண்ணிக் கொண்டு மனைவியை வற்புறுத்துவது சரிதானா என்று நீங்கள் எண்ணி பார்க்க வேண்டும்.
பெண்களும் தனது கணவனிடம் மிகவும் பணிந்து போவது தவறு.தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும்.
உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எவளிடமாவது போய் எய்ட்ஸை இலவசமாக வாங்கி வராதீர்கள் என்று கணவனிடம் அறிவுருத்த வேண்டும்.
பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே மறைத்து வைப்பதுதான் பிரச்சனையே. அதற்காக ஆண்களை மிகவும் பயமுறுத்தக்கூடாது.
என்று இருவருக்கும் ஆலோசனை கூறி அனுப்பிவைத்தேன்.
இன்றைய காலகட்டத்தில் நிறைய குடும்பங்களில் ஆண்களும் பெண்களும் நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்திக்கும் வேதனைகள், தாம்பத்ய உறவில் ஏற்படும் பிரச்சனைகள், உடல்ரீதியான பிரச்சனைகள், போன்றவற்றை மருத்துவரிடம் கூற தயங்குகிறார்கள், அதற்கு காரணம், ஒரு ஆண் / பெண் மருத்துவரிடன் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சம்தான்.
இந்த கூச்சத்தை விட்டு விட்டு மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறும்போது உங்களுக்கு நல்ல வழி கிடைக்கும்,
குடும்ப நல உளவியல் / மனநல ஆலோசனை & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
உளவியல் / மனோதத்துவ நிபுணர் மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் குடும்ப நல
உளவியல் / மனநல
ஆலோசனை பெற்று பலர் நல்ல
பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குடும்ப பிரச்சனை, – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==