AMMONIUM MURIATICUM - அம்மோனியம் முரியாட்டிக்கம்
AMMONIUM MURIATICUM அம்மோனியம் முரியாட்டிக்கம்; அம்மோனியத்தின்
உப்பு மட்டும்.
இது விசேஷமாக, குண்டான சதை கால்கள் தொழ, தொழுத்தும், பாதம் மட்டும் மிக, மிக மெலிதாக இருக்கும். மூலத்தில் வலி ஏற்படும். மூலத்தில் வரும் நீர், காரமாகவும், இரணம் போலவும், குத்துவது போலவும், வலிக்கும். இவர்கள் மலம் கழியும் போது ஒரு பெரிய பந்து மாதிரி மலம் உள்ளே உருண்டு கொண்டே இருக்கும். வெளியே வராது. மிகவும் சிரமப்பட்டு கழிந்த பிறகும் ஒரு மணி நேரம் ஆன பிறகும் போகலை என்பார்கள்.
கோழி முட்டையின் வெள்ளை கரு போல வெள்ளை படுது என்பார்கள். அப்ப வயிற்றை கவ்வி பிடிக்குது என்பார்கள். நடக்கும் போது தொடையும், தொடையும் ஒரஞ்சி இரத்தம் வடியுது, புண்ணாகி விடுதுங்க என்பார்கள். மலக்காற்று பெரிய சப்தத்துடன் நிறைய போகுது என்பார்கள்.
மனம் மிகுந்த வருத்தம், அப்படியே வெறுப்போடு, வேதனையோடு, துன்பத்தோடு ஸ்தம்பித்து போய் பித்து பிடித்து உட்கார்ந்து விடுவார். இவ்வளவுக்கும் கண்ணீர் வராது. ஆனால் மனம் அழுது கொண்டேயிருக்கும். பிறரோடு இவர்கள் உரையாடும் போது மிகுந்த எச்சரிக்கையோடு நடந்து கொள்வார். எரிச்சலோடு இருப்பார். உடன் கோபப்படுவார். ஒரு குறிப்பிட்ட நபரையோ, பொருளையோ, கடுமையாக வெறுப்பார்கள். அப்படி வெறுப்பதிலிருந்து தன்னை மாற்றி கொள்ள இயலாது.
காலத்துக்கு முன்னதாக மாதவிலக்கு, அப்படியே கொட்டும். அடிவயிற்று வலியானது முதுகு பக்கம் இழுக்கும். மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். இவர்களுக்கு மாதவிலக்கு இரவு நேரம், (அ) தூங்கும் போது தான் தோன்றும். மலம் கழிய, சிறுநீர் கழிய முக்கும் போது மாதவிலக்கு குபுக், குபுக்குன்னு படும். அதே மாதிரி வெள்ளைபாடும் குபுக், குபுக்குன்னு வலியோடு படும். அப்போது யோனி உதடுகளை சுற்றிலும் கிள்ளுவது போல வலி ஏற்படும். இதே மாதிரி உருண்டை மலத்தை வெளியேற்றிய பிறகும் கிள்ளுவது போல ஆஸனத்தில் வலிக்கும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க - +91 9786901830, +91 9443054168
---