ALUMINA – அலுமினா
ALUMINA. அலுமினா அலுமினியம்.
வண்டியிலிருந்து கீழே விழுந்து சாவேன் என்றால் ALUM, ARS.. சிறிது அழுக்கு என்றாலும், முடியில் வெள்ளை முடி இருந்தால் அதை வெட்டுவதும், டை அடிப்பதும் போன்றவற்றை (மெதுவாக) பொறுமையாக செய்வார்கள். பிறர் பொருளை திருடுவார்கள். தற்கொலை செய்து கொள்ள நினைப்பவர்கள், கத்தியைப் பார்த்தால் தற்கொலை விருப்பம் வரும். ஆனால் இரத்தத்தைப்பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள். மூக்கு நுனியில் வெடிப்பு, தெரிந்தவரை பார்த்தால் மயங்கி கீழே விழுந்து விடுவார்கள்.
தெரிந்தவரை பார்த்தால் கூட எங்கோ பார்த்த மாதிரி இருக்கும். காலம் மெதுவாக போவது போல இருக்கும். எனக்கு பைத்தியம் பிடிப்பது உறுதி என்பார்கள். பெயிண்ட் அடிப்பவர்களுக்கு தொல்லை என்றால், மலம் கொஞ்சம் வந்தவுடன் பெட்டக்ஸை தட்டி விடுவார் ALUM. (இதே போல் தினமும் செய்தால் TARENT.).)
எப்போதும் படுத்துக் கொண்டேயிருக்க விருப்பம். 12 மருந்துகளில் இது முக்கிய மருந்து. பாதத்திற்கு அடியில் ஏதோ சானியோ, மலமோ, ஒட்டடையோ ஏதோ மென்மையான பொருள் அப்பிக் கொண்டு இருக்கிற மாதிரி ஓர் உணர்வு இருக்குதுங்க என்பார்கள். கால் மெதுமெதுவென இருக்கிறது என்பார்கள் மலம் ஒரு பெரிய உருண்டையாக களிமண் போல பிசு, பிசுன்னு, ஆசனவாயில் அப்பிக் கொண்டு வரும்.
கந்தல் துணி, காகிதம், ஸ்ட்ராங்கான காப்பி, டீ, அரிசி, சாம்பல், துண்டு காகிதம் போன்றவற்றை சாப்பிட விருப்பம். உப்பும், உருளைகிழங்கும் சாப்பிட்டால் தொல்லை தருகிறது என்பார்கள். நீண்ட நாட்களாக வெள்ளைப்பாடு. அதாவது மாதவிலக்கு முடிந்த பின்பு, வெள்ளைப்பாடு தோன்றி அடுத்த மாதம் வரை வெள்ளைபடுது என்பார்கள். வெள்ளைபாடு குதிங்கால் வரை பால் போல வரும் அந்த இடம் புண்ணாகிவிடும்.
வயிற்றில் இருந்து ஏதோ ஒரு பந்து மாதிரி மேலே வருவது போல மாயமாக வயிற்றில் தெரியும், கத்தி, துப்பாக்கி பார்த்தவுடன் தற்கொலை செய்து கொள்ள விருப்பம். தலைவலி எனக்கொரு மாதிரி வருதுங்க என்பார்கள். நானா பேசிகிறேன், ஆத்தா, முனி, பேய் பேசுகிறது என்பார்கள். வண்டியில் போகும் போதும், நடந்து போகும் போதும், பின்னாடி ஏதாவது வந்து இடித்து விடுமோன்னு பயம் இருக்கும்;. அரிசி, சுண்ணாம்பு, களிமண் சாப்பிட வேண்டும் என்ற எண்ணமும், விருப்பமும் இவர்களுக்கு இருக்கும்.
மிகுந்த குழப்பம் மிக்கவர்கள். அன்று பார்த்தது அவரா என்று குழம்பி விடுவார்கள். ஓயாது ஏதோ ஒரு துக்கம் ஏற்படுவது போன்ற எண்ணம் இருக்கும். ஏதோ ஒரு குரல் எழுப்புவதும் அதைப் பற்றி கவலைப்படுவதும் துக்கப்படுவதுமாக இருப்பார். பொய்யான தோற்றம் ஏற்படுவது போல் ஏற்படும். நெருப்பு பந்தம் மேலே ஏறுவது போல் தோற்றம். உருள்வது போல் இப்படி ஒரு பொய்யான தோற்றம். அவசரம் பட்டு பட்டு ஞாபகசக்தி முழுவதும் இழந்து விடுவார்கள். இதனால் தன் பெயரை கூட மறப்பார்கள். இதை எண்ணி, எண்ணி தன் தலையே வேறொருவர் தலை போல் காணப்படும். இதனால் தனக்கு பைத்தியம் பிடிக்கும் என்ற எண்ணம் வரும். இதனால் தனக்கு ஏற்படும் வலி சிறு நேரம் கழித்து தான் தெரியும்.
நரம்பு மண்டலம் செயலிழந்து விடும். மலம் கழிவது கூட தெரியாது. அதனால் படுக்கையில் மலம் கழிந்து விடுவோமா என்ற பயம் இருக்கும். உணர்ச்சி இழப்பின் காரணமாக மலம் முக்கி கழிவார்கள். பாட்டில் பால் குடிப்பவர்களுக்கும், வயதானவர்களுக்கு இப்படி ஏற்படும். ரொம்ப நாள் நெஞ்சுகரிப்புக்கு இதுவே மருந்து. நெஞ்சு அடைப்பது போல் எண்ணம் இருக்கும். இதற்கு உணவு ஒட்டிக் கொள்வது தான் காரணம்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மருத்துவ ஆலோசனைக்கு தொடர்பு கொள்க - +91 9786901830, +91 9443054168
---