மார்பகத்தில் உள்ள செல்கள் கட்டுப்பாடு இன்றி வளர்ச்சியடைதல். இது பால் சுரப்பிகளையும் காம்புகளையும் பாதிக்கலாம்.ஆண், பெண் இருபாலாரிலும் ஏற்படலாம்.
சில சாத்தியகூறுகளை கட்டுப்படுத்த முடியும்.
- மாதவிடாய் நிறுத்தத்தின் பின் உடல் பருமன் அதிகரித்தல்.மாதவிடாய் நிறுத்தத்தின் முன் ஈஸ்ட்ரஜன் சூலகத்தில் சுரக்கப்படும்.கொழுப்புஅதிகம் இருக்குமிடம் மாதவிடாய் நிறுத்தத்தின் பின் ஈஸ்ட்ரஜன் சுரக்கும் முக்கிய இடமாகும். ஈஸ்ட்ரஜன் அதிகரித்தல் மார்பக புற்று நோயினை அதிகரிக்கும்.
- உணவு – அதிக கொழுப்பு உணவுகள், அதிக கார்போஹைட்ரேட் உணவுகள் .அதிக மாமிச உணவுகள் உண்பதால் மார்பக புற்று நோய் அதிகரிக்கலாம்.
- மது அருந்துதல்-ஆராய்ச்சிகள் மூலம் மது அருந்துவதால், மார்பக புற்று நோயும் அதிகரிப்பதாக முடிவுகள் தெரிவிக்கின்றன.
- புகைத்தல் – மார்பக புற்று நோய் ஏற்பட சாத்தியக்கூறுகள் உள்ளது.
- ஈஸ்ட்ரஜன் - பெண் ஹார்மோனான் ஈஸ்ட்ரஜன் மார்பக வளர்ச்சியை தூண்டுகிறது. அதிகளவிலான அல்லது நீண்ட கால ஈஸ்ட்ரஜன் மருந்துகள் உட்கொள்ளுதல் மார்பக புற்றுநோய் சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
- பிள்ளை பேறற்ற பெண்
- தாய்ப்பாலூட்டாத பெண்
கட்டுப்படுத்தமுடியாத காரணிகள்:
- வயது – அதிகரிக்க சாத்திய கூறு அதிகரிக்கும். மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன் புற்று நோய் ஏற்படுவது குறைவு.
- மார்பக புற்று நோய் ஒரு முறை ஏற்பட்டிருத்தல் - இது சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
- குடும்பத்தில் மார்பக புற்று நோய் காணப்படுதல் . தாய், சகோதரி அல்லது மகளுக்கு புற்று நோய் ஏற்பட்டிருந்தால் – இது சாத்திய கூறு அதிகம். 40 வயதிற்கு முன் ஏற்பட்டிருந்தால் சாத்தியகூறுகள் மேலும் அதிகரிக்கும்.
- பிறப்புரிமை அணுக்களில் மாற்றங்கள் - BRCA1,BRCA2 எனும் பிறப்புரிமை அணுக்களில் ஏற்படும் மாற்றங்களே மார்பக புற்று நோய்க்கு காரணம்.
- இனப்பெருக்கம் மற்றும் மாதவிடாய் – முன் கூட்டி பூப்படைதல் மூலம் அதிக மாதவிடாய் சுழற்ச்சிகள் ஏற்படும். எனவே ஈஸ்ட்ரஜன் அதிகரிக்கும். இது புற்று நோய்க்கான சாத்திய கூற்றை அதிகரிக்கும்.
- 12 வயதிலும் குறைந்த பெண் பூப்படைதலும் ,55 வயதிற்கு பின் மாதவிடாய் நிறுத்தமும் ஏற்பட்டால் மார்பக புற்று நோய்க்கான சாத்திய கூறுகள் அதிகம்.
ஆரம்பத்தில் எந்தவொரு அறிகுறியையும் ஏற்படுத்தாது. X-கதிர் படம் பிடித்தலின் போது அல்லது ஸ்கேன் செய்யும் போது தற்செயலாக கண்டுபிடிக்கப்படலாம்.
- மார்பக கட்டி
- மார்பக வீக்கம்
- தோலில் வலி
- மார்பக வலி
- மார்பக காம்பில் வலி அல்லது மாற்றம்
- மார்பக காம்பிலிருந்து வெளியேற்றம்
- அக்குள் பகுதியில் கட்டி
மார்பக புற்று நோயை முன்கூட்டி அறிதலின் மூலம் , அதை குணமடையச்செய்யலாம். இது மார்பக அகற்று சிகிச்சையிலிருந்து பாதுகாக்கும்.
இவ்வாறான பரிசோதனைகள் சுகமான பெண்களில் செய்யப்படும். பெண்களுக்கு தன் மார்பகங்களை தானே பரிசோதித்தல் மூலம் கட்டிகளை முன்கூட்டியே அறியலாம்.
- மேமோகிராம் - இது மார்பகத்தின் X – கதிர் படமாகும்.இவை வருடத்திற்கு
- ஒருமுறை செய்யப்படுவது நல்லது. இது பொதுவாக 40 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கு செய்யப்படும், இது பாதுகாப்பானது மற்றும் நம்பதகுந்தது .
- ஒலி மூலம் ஸ்கேன்(USG) – இது உயர் ஒலிகதிர்களை செலுத்தி, மார்பக இழையங்களை பார்ப்பதாகும். இது கதிரியக்கம் அற்றது. இது 40 வயதிற்கு குறைந்த பெண்களுக்கு உகந்த ஒரு முறையாகும் , ஏனெனில் இவ்வயதில் மார்பகம் உயர்ந்த அடர்த்தி கொண்டுள்ளது.
- தற்பரிசோதனை ( Self Examination)
- கண்ணாடி முன் நின்று உங்கள் மார்பகங்களை பார்க்கவும். தோள்கள் நேராகவும் கைகள் இடுப்பிலும் வைக்க வேண்டும்
- இப் போது,மார்பக பருமனில் அல்லது வடிவத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், நிற மாற்றங்கள், வீக்கம், மார்பக காம்பில் மாற்றங்கள் ஏதேனும் தெரிகிறதா என்பதை கவனிக்கவும்.
- கைகளை தலைக்கு மேலாக தூக்கி, மார்பக தோலில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா என பார்க்க வேண்டும்
- இப்போது, மார்பகங்களை முதலில் நின்ற நிலையில் அல்லது உட்கார்ந்த நிலையில் பரிசோதிக்க வேண்டும், இடப்புற மார்பகம் வலது கையினாலும் வலப்புற மார்பகம் இடக்கையினாலும் பரிசோதிக்க வேண்டும்.
மார்பக காம்பு அழுத்தப்பட்டு பரிசோதிக்கப்படவேண்டும்.
அண்மை காலங்களில் மார்பக புற்று நோய் சிகிச்சை முறைகளில் முன்னேற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன. தற்போது அறுவை சிகிச்சை , ஹார்மோன் சிகிச்சை மற்றும் இரசாயன சிகிச்சை செய்யப்படுகின்றன.